சூர்யாவுக்காக குரல் கொடுத்த பிரபல நடிகர்!

 

நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் இம்மாதம் 30ஆம் தேதி ஓடிடியில் வெளிவர உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சூர்யாவுக்காக பிரபல நடிகர் ஒருவர்  பின்னணி குரல் கொடுத்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது 

தமிழில் மட்டுமின்றி சூரரைப்போற்று திரைப்படம் தெலுங்கிலும் டப் செய்து வெளியாக உள்ளது என்பதும்,  இந்த தெலுங்கு பதிப்பிற்கு பிரபல நடிகர் சத்யதேவ் என்பவர் சூர்யாவின் கேரக்டருக்கு குரல் கொடுத்துள்ளார் என்றும், அவர் அச்சுஅசலாக சூர்யா போலவே பின்னணி பேசி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது 

மேலும் சூரரைப்போற்று படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லர் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளது சூர்யாவின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி சூரரைப்போற்று படத்தில் மூன்று பாடல்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பாடல்களும்ம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுவதால் சூரரைப்போற்று ஜூரம் வெகு விரைவில் அவரது ரசிகர்களிடையே பற்றி விடும் என்று தெரிகிறது

From around the web