நடிகர் தவசிக்கு ரூ.1 லட்சம் கொடுத்த பிரபல நடிகர்!

 

பிரபல குணசித்திர நடிகரும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் பஞ்சாயத்து காட்சிகள்இல் மிக சிறப்பாக நடித்தவருமான நடிகர் தவசி புற்றுநோயால் அவதிப்பட்டு இருந்தார் என்ற செய்தி நேற்று மாலை முதல் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

மேலும் இந்த தகவல் கிடைத்ததை அடுத்து நடிகர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். ஏற்கனவே சிவகார்த்திகேயன் ரூபாய் 25 ஆயிரமும் நடிகர் சூரி ரூபாய் 20 ஆயிரம் நிதி உதவி கொடுத்துள்ளனர். மதுரையை சேர்ந்த திமுக எம்எல்ஏ சரவணன் என்பவரும் இலவசமாகவே நடிகர் தவசுக்கு தனது அறக்கட்டளை மூலம் சிகிச்சை அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

vijay sethupathi

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி நடிகர் விஜய் சேதுபதி ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி செய்திருப்பதாக தெரிகிறது. இதனால் நடித்த தவசி குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் திரையுலகினர் பலரும் உதவி செய்ய முன் வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் நடித்த தவசி மிக விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web