"அன்பிற்கினியாள்" ஃபர்ஸ்ட் லுக்கை அன்போடு வெளியிட்டார் பிரபல நடிகர்!

"அன்பிற்கினியாள்" ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் "கைதி" பட கதாநாயகன்!
 
நடிகர் கார்த்தியின் ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் "ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்"!

"பருத்திவீரன் "படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் "நடிகர் கார்த்தி" . இவர் மிகவும் புகழ் பெற்ற பிரபல நடிகரான "சிவகுமாரின் மகன்" ஆவார். மேலும் இவர் "நடிப்பின் நாயகன்" என்று அழைக்கப்படும் "நடிகர் சூர்யாவின் தம்பி "ஆவார்.

karthi

தற்போது நடிகர் கார்த்தி "சுல்தான்" திரைப்படத்தில் நடித்துள்ளார்.இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக இளம் கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகை "ரஷ்மிகா மந்தனா" நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகி வைரலாக பரவியது. மேலும் இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

மேலும் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகிய "கைதி","தீரன் அதிகாரம் ஒன்று" போன்ற திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய "பையா" திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக பெண் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது. மேலும் இத்திரைப்படத்தில் இருந்து வெளியாகிய அனைத்து பாடல்களும் வைரலாக பரவியது. தற்போது நடிகர் கார்த்தி "அன்பிற்கினியாள்" என்ற படத்தின் "ஃபர்ஸ்ட் லுக்கை" வெளியிட்டுள்ளார். இதனால் "அன்பிற்கினியாள்" படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

From around the web