மீண்டும் அசத்திய அறந்தாங்கி நிஷா: அட்ராசிட்டி அனிதா!

 

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த சீசனில் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே. முதல் நாளில் கலகலப்பாக பேசி பிக்பாஸ் உள்பட அனைவரையும் கலாய்த்த அறந்தாங்கி நிஷா நேற்றைய 2-வது நாளிலும் பார்வையாளர்களிடம் ஆட்ட நாயகன் விருதை பெற்றார் 

நேற்று ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய அனுபவங்களை கூறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பேசிய அறந்தாங்கி நிஷா தான் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் தனது கருப்பு கலரால் ஏற்பட்ட அவமானங்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் கூறினார். அவர் கூறியதைக் கேட்க கேட்க போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்கள் கண்களிலும் கண்ணீர் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 

ஆனாலும் இடையிடையே அவர் அடித்த ஜோக்குகள் நிகழ்ச்சியை நேற்று சென்டிமென்டாக கொண்டு சென்றது. இது ஒரு பக்கமிருக்க அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தியுடன் மோதிய சண்டையும் விறுவிறுப்பாக இருந்தது 

செய்தி வாசிப்பவர்கள் வாயிலிருந்து எச்சில் தெறிக்கும் என சுரேஷ் சக்ரவர்த்தி கூறியதாக குற்றஞ்சாட்டிய அனிதா சம்பத், அவ்வாறு எப்படிக் கூறலாம் என்று மல்லுக்கட்ட அவர்களை சமாதானப்படுத்த மாற்ற போட்டியாளர்கள் திணறினர்

மொத்தத்தில் நேற்றைய நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷாவின் நெகழ்ச்சியான பேச்சும், அனிதா சம்பத்தின் அட்ராசிட்டி சண்டையும் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web