அமலாபாலின் சொந்த ஊரில் F45 டிரைனிங்: நண்பர்களுடன் குதூகுலம்!

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக அமலாபால் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான மற்றும் வித்தியாசமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே 

அந்த வகையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் f45 ட்ரெய்னிங் இல் கலந்து கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை குறிப்பிட்டுள்ளார் 

f45 என்பது உலகப்புகழ் பெற்ற பிட்னஸ் சென்டர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைத் தலைமையிடமாக கொண்ட இந்த பிட்னஸ் சென்டர் உலகம் முழுவதும் கிளைகளை நிறுவி உள்ளது 

அந்த வகையில் தற்போது அமலாபாலின் சொந்த ஊரான கொச்சியில் இந்நிறுவனத்தின் கிளை திறக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையத்தில் தான் அமலாபால் தனது நண்பர்களுடன் இணைந்து பிட்னஸ் பயிற்சிகளில் ஈடுபடும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்

இந்த புகைப்படம் தற்போது மிக வேகமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த பயிற்சிக்கு பின்னர் அமலாபால் பக்காவாக பிட்னெஸ் ஆகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web