கே.வி.ஆனந்த் மறைவுக்கு உருக்கமான ட்வீட் போட்ட ஹாரிஸ் ஜெயராஜ்

கே.வி.ஆனந்த் மறைவுக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உருக்கமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

 
கே.வி.ஆனந்த் மறைவுக்கு உருக்கமான ட்வீட் போட்ட ஹாரிஸ் ஜெயராஜ்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

அயன், கோ, மாற்றான், அனேகன், கவன், காப்பான் என கே.வி.ஆனந்த் இயக்கிய படங்கள் எல்லாவற்றுக்கும் பெரும்பாலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருப்பார்.

இவரின் இயக்கத்தில் உருவான பெரும்பாலான படங்கள் ஹிட் படங்கள் என்பதோடு இவர் படங்களின் பாடல்களும் ஹிட் பாடல்களாகவே அமைந்தன. இந்நிலையில் கே.வி.ஆனந்த் மறைவுக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உருக்கமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தமது ட்வீட்டில், ஹாரிஸ் ஜெயராஜ், இதுகுறித்து,  “மிகவும் அதிர்ச்சியாக உள்ளது மற்றும் இந்த உடைந்து போகச்செய்யக் கூடிய செய்தியைக் கேட்பது துரதிர்ஷ்டவசமானது. என் நண்பர் கே.வி.ஆனந்த் ஆத்மா சாந்தி அடையட்டும்.!” என பதிவிட்டுள்ளார்.


 

From around the web