எதிர்பார்த்த சென்டிமென்ட் காட்சி வந்துவிட்டது: ரியோ கதறி அழுத வீடியோ!

 

பிக் பாஸ் வீட்டில் தற்போது ’ப்ரிஸ்’ டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் தெரிந்ததே

ஏற்கனவே ஷிவானியின் அம்மா, பாலாஜியின் சகோதரர் மற்றும் ரம்யாவின் அம்மா ஆகியோர் வந்து விட்ட நிலையில் தற்போது ரியோவின் மனைவி வருகிறார். ரியோவின் மனைவி தனது குழந்தையுடன் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தனியாக வந்தது ரியோவுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் ரியோ தனது மனைவி சுருதியை பார்த்தவுடன் கட்டிப்பிடித்து அழும் சென்டிமென்ட் காட்சிகள் இன்றைய இரண்டாவது புரமோவில் உள்ளன. இந்த காட்சிகள் கண் கலங்க வைக்கும் அளவில் உள்ளது

rio shruthi

இந்த நிலையில் நண்பர்களின் கடுப்பு என்று கூறும் சுருதியிடம் ’அது என்ன’ என்று ரியோ கேட்கும் போது ’நீ பாட்டுக்கு ரம்யாவை அலேக் ஆக ஒரு எபிசோடில் தூக்கினாயே, அதுதான் நண்பர்களின் கடுப்பாக உள்ளது’ என்று கூற அதற்கு ரியோ, ‘இது நண்பர்களின் கடுப்பு போல் தெரியவில்லையே’ என்று சுருதியை ஒருமாதிரி பார்க்க, அந்த இடமே ஒரு காமெடி கலாட்டா இடம் போல் ஆகிறது 

மொத்தத்தில் ரியோ மனைவியின் வருகை சென்டிமெண்ட் மற்றும் கலகலப்பான காட்சிகளாக இருக்கின்றது என்பது குறிப்பிடதக்கது. இன்றைய மூன்றாவது புரமோ வீடியோவில் வேறு எந்த போட்டியாளரின் உறவினர்கள் வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web