80 வயதில் உற்சாகமாக ஆடிய பாடகி: ஆர்ஜே பாலாஜி வெளியிட்ட வீடியோ

 

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து தற்போது தீபாவளி விருந்தாக ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த படத்தின் புரமோஷன் பணிகளை இயக்குனர் ஆர் ஜே பாலாஜி தற்போது செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பழம்பெரும் பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து படக்குழுவினர்களிடம் ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்

80 வயதிலும் அவர் உற்சாகமாக பாடி ஆடியதோடு இந்த படத்தில் முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ளார் என்று ஆர்ஜே பாலாஜி குறிப்பிட்டுள்ளார். எல்ஆர் ஈஸ்வரி அவர்கள் கடந்த பல வருடங்களுக்கு முன்பே மேடையில் ஆடிக்கொண்டே பாடும் வழக்கத்தை உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

From around the web