குடிக்கும் போட்டியில் அசத்திய பிக் பாஸ் போட்டியாளர்கள்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கிறது. 16 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் சேரன், கவின், தர்ஷன், முகென், சாண்டி, வனிதா, ஷெரின், லோஸ்லியா என பாதியாகக் குறைந்து 8 போட்டியாளர்கள் உள்ளனர். வரும் வாரத்தின் தலைவருக்கான டாஸ்க்கில், வனிதா, முகென் மற்றும் சேரன் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் வனிதா வெற்றி பெற்றார். அதன்பின்னர் ப்ரூட்டி டாஸ்க் நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் கிரீன் டீம், யெல்லோ டீம் என்று இரு அணியாக பிரிக்கப்பட்டனர். கயிற்றைப் பயன்படுத்தி
 
குடிக்கும் போட்டியில் அசத்திய பிக் பாஸ் போட்டியாளர்கள்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கிறது. 16 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் சேரன், கவின், தர்ஷன், முகென், சாண்டி, வனிதா, ஷெரின், லோஸ்லியா என பாதியாகக் குறைந்து 8 போட்டியாளர்கள் உள்ளனர்.

வரும் வாரத்தின் தலைவருக்கான டாஸ்க்கில், வனிதா, முகென் மற்றும் சேரன் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் வனிதா வெற்றி பெற்றார்.

குடிக்கும் போட்டியில் அசத்திய பிக் பாஸ் போட்டியாளர்கள்!!

அதன்பின்னர் ப்ரூட்டி டாஸ்க் நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் கிரீன் டீம், யெல்லோ டீம் என்று இரு அணியாக பிரிக்கப்பட்டனர். கயிற்றைப் பயன்படுத்தி ப்ரூட்டி குடிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
கிரீன் டீமில் சேரன், கவின், முகென், வனிதா ஆகியோர் பங்கேற்ற நிலையில், முதலில் முகென் குடித்து முடித்தார். அவருக்கு அடுத்தபடியாக சேரனும் கவினும் குடித்து முடித்தனர்.

ப்ரூட்டி குடிப்பதற்குப் பதிலாக அதில் முழுவதுமாக வனிதா நனைந்துவிட்டார். இதனை அடுத்து மஞ்சள் நிற அணியினர் ப்ரூட்டி குடித்தனர். யெல்லோ அணியில் ஷெரின், தர்ஷன், சாண்டி, லோஸ்லியா ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் ஷெரின் முதலாவதாக ப்ரூட்டி குடித்தார். அவரை அடுத்து தர்ஷன் 2 வதாக குடித்தார். 3ஆவதாக சாண்டி குடித்தார், அதன்பின்னர் கடைசியாக லோஸ்லியா குடித்து முடித்தார். இறுதியில் யொல்லோ அணி வெற்றி பெற்றது.

From around the web