தம்பி சூர்யாவின் ஒவ்வொரு வரியும்.... நீட் அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்தாரா பாரதிராஜா ?

நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று முன்தினம் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

 

நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று முன்தினம் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் நீட்தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வு குறித்தும் இந்த தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குறித்தும் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் மற்றும் அவரது அவர்களது பெற்றோர்கள் குறித்தும் நேற்று நடிகர் சூர்யா ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார் 

இந்த அறிக்கையை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு சமூக வலைதளங்களிலும் வைரல் ஆனது. இந்த நிலையில் இந்த அறிக்கை குறித்து இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் கூறியதாவது: ’ஒவ்வொரு வரிகளிலும் தம்பி சூர்யா ஓர் தகப்பனாராக கூறியுள்ளார். இது நடிகரின் குரல் இல்லை மனதின் குரல்’ என்று பாரதிராஜா தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

ஆனால் பாரதிராஜாவின் இந்த டுவிட்டர் பக்கம் போலியானது என்றும், அவரது உண்மையான டுவிட்டர் பக்கத்தில் சூர்யாவின் அறிக்கை குறித்து அவர் எதுவும் பதிவு செய்யவில்லை என்றும் கோலிவுட் திரையுலகினர் கூறி வருகின்றனர்.

From around the web