அவருடன் நடித்த ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் மறக்க முடியாதவை!"சூப்பர் ஸ்டார்"

சிவாஜி படப் பிடிப்பில் விவேக் உடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள் என்று கூறுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
 
அவருடன் நடித்த ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் மறக்க முடியாதவை!"சூப்பர் ஸ்டார்"

மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை மற்றும் கொடுக்காமல் பல அறிவுரைகளையும் பல சமூக சீர்திருத்தங்களையும் இயற்கை சூழலையும் பாதுகாத்து வந்தவர் நடிகர் விவேக். நடிகர் விவேக் சிறிய நடிகர் பெரிய நடிகர் என்று பாராமல் அனைத்து  நடிகர்களுடனும் நடித்து இருந்தார் என்பதும் அவரின் குணத்தை குறிக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி தற்போது உள்ள ஹரிஷ் கல்யாண் வரை அனைவருடனும் பாரபட்சமின்றி இணைந்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மறைந்த முதல்வர் ஏபிஜே அப்துல் கலாமின் ஆசையான மரங்களையும் இவர் தமிழகமெங்கும் நட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

vivek

 இப்பெயர் பெற்ற இந்த மாமனிதன் இன்றைய தினம் மரணமடைந்தது சினிமா துறையே சோகத்தில் உள்ளாக்கியுள்ளது. அதன்படி அவர் நேற்றைய தினம் திடீரென்று மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும்  நேற்றைய தினம் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன்படி நடிகர் விவேக்கின் உடல்நிலை பற்றி 24 மணி நேரத்துக்குப் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போது சோகமான தகவல் என்னவென்றால் நடிகர் விவேக் மரணம் அடைந்தார்.

இவரது மனதிற்கு பல ரசிகர்கள் தலைவர்கள் பிரபலங்கள் அனைவரும் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர்கள் மத்தியில் இவர் உடன் பணியாற்றிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சில தகவலை கூறி அவரைப் பற்றியும் புகழாரம் தெரிவித்துள்ளார். அதன்படி நடிகர் விவேக் சின்ன கலைவாணர், சமூக சேவகர் எனது நெருங்கிய நண்பர் மரணமடைந்தது மிகுந்த வேதனை அளிப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார். மேலும் சிவாஜி படப்பிடிப்பில் நடிகர் விவேக் உடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள் ஆக இருக்கும் என்றும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார். மேலும் விவேக்கை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

From around the web