மாதவன் திரைப்பட இயக்குனர் மரணம்: திரையுலகினர் இரங்கல்

தமிழில் மாதவன் நடித்த ’எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தை இயக்கியவரும் பிரபல பாலிவுட் இயக்குனருமான நிஷிகாந்த் காமத் என்பவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் அவர் காலமாகிவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சையின் பலனின்றி அவர் காலமானார். தமிழில் மாதவன் நடித்த ‘எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய
 

மாதவன் திரைப்பட இயக்குனர் மரணம்: திரையுலகினர் இரங்கல்

தமிழில் மாதவன் நடித்த ’எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தை இயக்கியவரும் பிரபல பாலிவுட் இயக்குனருமான நிஷிகாந்த் காமத் என்பவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் அவர் காலமாகிவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சையின் பலனின்றி அவர் காலமானார்.

தமிழில் மாதவன் நடித்த ‘எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய நிஷிகாந்த் காமத், தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெற்றி பெற்ற ’த்ரிஷ்யம் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தார் என்பதும், பாலிவுட்டில் பல வெற்றி படங்களை இயக்கி முன்னணி இயக்குனர் பட்டியலில் இடம்பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

50 வயதே ஆன நிஷிகாந்த் காமத் மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web