செக்க சிவந்த வானம்: சிம்பு கேரக்டர் அறிவிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘செக்க சிவந்த வானம்’ படத்தின் ஒவ்வொரு கேரக்டர்களின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அரவிந்தசாமி ‘வரதன்’ என்ற கேரக்டரிலும், அருண்விஜய் ‘தியாகு’ என்ற கேரக்டரிலும், விஜய்சேதுபதி ‘ரசூல்’ என்ற கேரக்டரிலும் ஜோதிகா ‘சுமதி’ என்ற கேரக்டரிலும் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் சிம்புவின் கேரக்டர் ‘எத்தி’ என்று அறிவிக்கப்பட்டு சிம்புவின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அதிதிராவ் ஹைத்ரி
 

செக்க சிவந்த வானம்: சிம்பு கேரக்டர் அறிவிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘செக்க சிவந்த வானம்’ படத்தின் ஒவ்வொரு கேரக்டர்களின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

அரவிந்தசாமி ‘வரதன்’ என்ற கேரக்டரிலும், அருண்விஜய் ‘தியாகு’ என்ற கேரக்டரிலும், விஜய்சேதுபதி ‘ரசூல்’ என்ற கேரக்டரிலும் ஜோதிகா ‘சுமதி’ என்ற கேரக்டரிலும் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் சிம்புவின் கேரக்டர் ‘எத்தி’ என்று அறிவிக்கப்பட்டு சிம்புவின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அதிதிராவ் ஹைத்ரி ஆகியோர்களின் கேரக்டர்கள் மற்றும் அவர்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் நாளை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் அக்டோபரில் வெளியாகவுள்ளது.

From around the web