என்னா அடி, சோம்சேகரை அடித்து துவைக்கும் ரியோ!


 

 
என்னா அடி, சோம்சேகரை அடித்து துவைக்கும் ரியோ!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று பிக்பாஸின் அறிவிப்பு ஒன்று வந்தவுடன் சோம் சேகரை ரியோ அடித்து துவைக்கும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பாட்டி சொல்லை தட்டாதே என்ற டாஸ்க்கில் திருடனாக சோம் மற்றும் அவரும் அவரது கூட்டாளிகளான ரம்யாவும் கேப்ரில்லாவும் மிகச்சிறப்பாக சொத்து பத்திரத்தை திருடி, அதை ஒளித்து வைத்தனர்

som team

ஆனால் திருட்டு பட்டமோ பாலாஜியின் மேல் விழுந்ததால் அவர் டென்ஷனானார் என்பதும், பிக்பாஸ் வீட்டில் இதனால் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் டாஸ்க் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து என்று பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் திருடனாக நடித்தவரும் அவரது கூட்டாளியும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்று பிக்பாஸ் கூற, இதனை அடுத்து சோம் ரம்யா கேப்ரில்லா ஆகிய மூவரும் எழுந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, இந்த டாஸ்கை பிக்பாஸ் கூறியபடி எப்படி சீக்ரெட்டாக செய்து முடித்தனர் என்பதை தெரிவித்தனர்.

அதன் பின்னர் பாட்டியின் பத்திரத்தை அவர்கள் திருடிய காட்சி பிக்பாஸ் வீட்டில் உள்ள டிவியில் ஒளிபரப்பப்பட்டது. அதைப் பார்த்து சக போட்டியாளர்கள் ரசித்தனர். அப்போது சோம் மிக அபாரமாக பத்திரத்தை திருடியதை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த ரியோ, ஒரு கட்டத்தில் உற்சாகமாகி எழுந்து அவரது முதுகில் விளையாட்டாக அடிக்கும் காட்சிகளும் புரமோவில் உள்ளன,.


 

From around the web