யானையை மையப்படுத்தி வரும் தமிழ் படம்

இதற்கு முன் இராமநாராயணனின் எத்தனையோ படங்களில் யானை, குரங்கு எல்லாம் வந்துள்ளது. தேவர் பிலிம்ஸின் நல்ல நாள், அன்னை ஓர் ஆலயம், ராம் லெட்சுமண் உள்ளிட்ட படங்களில் யானை ஒரு முக்கிய கதாபாத்திரமாக வந்துள்ளது. சில வருடங்களுக்கு முன் வந்த கும்கி படத்திலும் நாயகன் விக்ரம் பிரபுவுடன் யானை முழுவதும் வருவது போல் கதை அமைக்கப்பட்டிருந்தது. அதே போல் இப்போது யானையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள படம், ராதாகிருஷ்ணா. மாஸ்டர் ஆதித்யா, லிவிங்ஸ்டன், கவுசல்யா, மனோபாலா, ஜி.எம்.குமார், மாரிமுத்து
 

இதற்கு முன் இராமநாராயணனின் எத்தனையோ படங்களில் யானை, குரங்கு எல்லாம் வந்துள்ளது. தேவர் பிலிம்ஸின் நல்ல நாள், அன்னை ஓர் ஆலயம், ராம் லெட்சுமண் உள்ளிட்ட படங்களில் யானை ஒரு முக்கிய கதாபாத்திரமாக வந்துள்ளது.

யானையை மையப்படுத்தி வரும் தமிழ் படம்

சில வருடங்களுக்கு முன் வந்த கும்கி படத்திலும் நாயகன் விக்ரம் பிரபுவுடன் யானை முழுவதும் வருவது போல் கதை அமைக்கப்பட்டிருந்தது.

அதே போல் இப்போது யானையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள படம், ராதாகிருஷ்ணா.

மாஸ்டர் ஆதித்யா, லிவிங்ஸ்டன், கவுசல்யா, மனோபாலா, ஜி.எம்.குமார், மாரிமுத்து மற்றும் பலர் நடிக்கின்றனர். இயக்கம், பி.ரஜினி. கதை, ஒளிப்பதிவு, தயாரிப்பு: செல்வம் மாதப்பன். அவர் கூறுகையில், ‘யானையும், சிறுவனும் அன்பாக பழகுவது எப்படி  என்பது கதை. கேரளா காடுகளில் படமாகியுள்ளது. அடுத்த மாதம்  ரிலீசாகிறது’ என்றார்.

From around the web