ஈஸ்வரனின் தாண்டவப்பொங்கல்: வைரலாகும் சிம்புவின் டுவீட்

 

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக திண்டுக்கல் அருகே நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது 

இந்த நிலையில் இன்று மதியம் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். சற்றுமுன்னர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தனது 46வது  படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் 

இந்த படத்திற்கு ’ஈஸ்வரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அட்டகாசமாக சிம்பு கையில் பாம்பை பிடித்தவாறு இருக்கும் போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டைட்டிலாக ஈஸ்வரன் என்ற ஹேஷ்டேக் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 

கடந்த சில மாதங்களாக கேரளாவில் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்து உடலைக் குறைத்திருக்கின்றார் சிம்பு என்று வெளிவந்த செய்தியும் இந்த போஸ்டரில் உறுதியாகிறது பத்து வருடங்களுக்கு முன்பு நாம் பார்த்த சிம்புவை இப்போது பார்ப்பது போல் அவ்வளவு அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த படம் சிம்புவுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாகவும் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க இருப்பதாகவும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது

From around the web