’ஈஸ்வரன்’ பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு: பொங்கல் ரிலீஸா?

நடிகர் சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய ’ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த படத்தை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இரவுபகலாக நடைபெற்று வருவதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது
இந்த நிலையில் ’ஈஸ்வரன்’ படத்தின் பாடல்கள் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது. ’ஈஸ்வரன்’ படத்தின் பாடல்கள் ஜனவரி 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் என்பதும், அனைத்து பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஆட்டம் போட வைக்கும் வகையில் இருக்கும் என்றும் ஒரே ஒரு பாடல் மட்டும் சென்டிமென்ட் பாடல் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது
சிம்பு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ள இந்த படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் சிம்புவின் மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
#Eeswaran Album 🎶 from Jan 2nd. ❤️ #SilambarasanTR pic.twitter.com/ISpAbOLLTV
— PRO Kumaresan (@urkumaresanpro) December 29, 2020