மணப் பெண் கெட்டப்பில் ஈரமான ரோஜாவே பவித்ரா… குவியும் லைக்குகள்!!

விஜய் தொலைக்காட்சியில் கார்த்தி- ஸ்ருதி நடிப்பில் 2013 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ஆபிஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தவர் பவித்ரா. இவர் ஆரம்ப காலத்தில் துணை நடிகையாகவே அறிமுகமாகி நடித்து வந்தார். இவர் ஆபிஸ் சீரியலைத் தொடர்ந்து பகல் நிலவு, சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை, ராஜா ராணி என விஜய் தொலைக்காட்சியின் பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். மற்ற சீரியல்களை விட சரவணன் மீனாட்சி சீரியலின் மூலமே பெரிய அளவில்
 
மணப் பெண் கெட்டப்பில் ஈரமான ரோஜாவே பவித்ரா… குவியும் லைக்குகள்!!

விஜய் தொலைக்காட்சியில் கார்த்தி- ஸ்ருதி நடிப்பில் 2013 ஆம் ஆண்டு  ஒளிபரப்பான ஆபிஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தவர் பவித்ரா. இவர் ஆரம்ப காலத்தில் துணை நடிகையாகவே அறிமுகமாகி நடித்து வந்தார்.

இவர் ஆபிஸ் சீரியலைத் தொடர்ந்து பகல் நிலவு, சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை, ராஜா ராணி என விஜய் தொலைக்காட்சியின் பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். மற்ற சீரியல்களை விட சரவணன் மீனாட்சி சீரியலின் மூலமே பெரிய அளவில் பிரபலமாகினார்.

சரவணன்- மீனாட்சி 3 யில் ரியோவின் தங்கையாக நடித்து வந்த இவருக்கு ஈரமான ரோஜாவே சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் சரவணன்- மீனாட்சி தொடர் முடியவிருந்த நிலையில், இவருக்கு திரவியம் மற்றும் குமரன் நடிப்பில் உருவான கிராமத்துக் கதையில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

மணப் பெண் கெட்டப்பில் ஈரமான ரோஜாவே பவித்ரா… குவியும் லைக்குகள்!!

கிராமத்துப் பெண் கெட்டப்பில் பவித்ரா கலக்கி வருகிறார், இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஊரடங்கால் சீரியல் படப் பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், இவர் வீட்டில் இருந்தபடி போட்டோஷுட் நடத்தி அதை இணையத்தில் பதிவிட்டு வருகின்றார்.

அதிலும் மணப்பெண் கெட்டப்பில் இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் பல ஆயிரக்கணக்கிலான லைக்குகளைப் பெற்றுள்ளது. இவர் விஜய் தொலைக்காட்சியில் மட்டுமல்லாது மெல்ல திறந்த கதவு, லட்சுமி வந்தாச்சு, போன்ற பிற சீரியல்களிலும் நடித்துள்ளார்.

From around the web