சிம்புவின் டிரேட்மார்க் பஞ்ச் வசனத்துடன் வந்துள்ள ஈஸ்வரன் டிரைலர்!

 

சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் வரும் பொங்கல் திருநாளான ஜனவரி 14ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது

இந்த படத்தின் டிரெய்லரில் சிம்புவின் டிரேட்மார்க் பஞ்ச் வசனங்கள் ஆங்காங்கே உள்ளதைப் பார்க்க முடிகிறது

இந்த டிரைலரின் இறுதியில் ’நீ அழிப்பதற்கு வந்த அசுரன் என்றால் நான் காப்பதற்கு வந்த ஈஸ்வரன்’ என்று ஆவேசமாக சிம்பு பேசும் பஞ்ச் வசனம் நிச்சயம் சிம்பு ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

easwaran

மேலும் இந்த படத்தில் அவரது அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மாஸ் ஆக இருப்பதாகவும் பத்து வருடத்திற்கு முன்பு பார்த்த சிம்புவை நாங்கள் பார்த்து வருகிறோம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர் 

மேலும் சிம்பு நிதி அகர்வால் ரொமான்ஸ் காட்சிகள், சிம்பு வில்லனுடன் மோதும் ஆக்ஷன் காட்சிகள், பாலசரவணன் காமெடி காட்சிகள் என ஒட்டுமொத்தமாக படம் குடும்ப ஆடியன்சை கவரும்படி இருப்பதாகவும் இந்த படம் நிச்சயம் சிம்புவின் திரையுலக வரலாற்றில் ஒரு மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என்றும் சினிமா ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்


 

From around the web