மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் த்ரிஷ்யம் 2: ஆனால் இந்தியாவில் இல்லையாம்!

 
dryshyam

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய த்ரிஷ்யம் 2 சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் மீண்டும் அந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் ஆனால் இந்தியாவில் ரிலீஸ் இல்லை என்றும் மோகன்லால் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

த்ரிஷ்யம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் த்ரிஷ்யம் 2 திரைப்படம் வெளியானது. இந்த படம் முதல் பாகத்தைப் போலவே மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த படம் மிகப்பெரிய வருமானத்தை பெற்றுக் கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இல்லையே என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் இருந்ததை அடுத்து மோகன்லால் தனது டுவிட்டரில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி த்ரிஷ்யம் 2 திரைப்படம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஓமன் ஆகிய நாடுகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் எந்தெந்த திரையரங்குகளில் வெளியாகிறது என்ற போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அரபு நாடுகளில் உள்ள மோகன்லால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரபுநாடுகளில் மோகன்லாலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web