போதைப்பொருள் விவகாரம்: பிரபல தயாரிப்பாளரின் மனைவி கைது

 

போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மனைவி கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கடந்த சில நாட்களாகவே திரையுலகைச் சேர்ந்த நடிகைகள் உள்பட ஒரு சிலர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். சுஷாந்த்சிங் தற்கொலைக்கு காரணமானவர் என குற்றம் சாட்டப்பட்ட ரியோ சக்கரவர்த்தி, கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி, திரிவேதி ஆகியோர் போதைப்பொருள் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டனர். மேலும் தீபிகா படுகோன் உள்பட ஒரு சில நடிகைகளிடம் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

firoz

இந்த நிலையில் பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் பிரோஸ் நதியத்வாலா என்பவரின் மனைவி ஷபானா சயீத்என்பவரை திடீரென போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் கைது செய்தனர்ல் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 10 கிராம் போதைப் பொருள் கைப்பற்றப்படது. இதனை அடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

வெல்கம் உள்பட பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஒருவரின் மனைவி போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web