திரௌபதி திரைப்படம் ரிலீஸ் ஆகுமா? திடீரென ஏற்பட்ட சிக்கலால் பரபரப்பு!

சமீபத்தில் வெளியான திரௌபதி என்ற படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது என்பதும் இது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்ததே இந்த படத்திற்கு ஆதரவாக ஒரு சிலரும் எதிர்ப்பாக ஒரு சிலரும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் அளிக்க கூடாது என சென்சார் அதிகாரிகளுக்கு ஏகப்பட்ட கடிதங்கள் குவிந்து உள்ளதாகவும் இதனை அடுத்து சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை
 
திரௌபதி திரைப்படம் ரிலீஸ் ஆகுமா? திடீரென ஏற்பட்ட சிக்கலால் பரபரப்பு!

சமீபத்தில் வெளியான திரௌபதி என்ற படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது என்பதும் இது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்ததே

இந்த படத்திற்கு ஆதரவாக ஒரு சிலரும் எதிர்ப்பாக ஒரு சிலரும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் அளிக்க கூடாது என சென்சார் அதிகாரிகளுக்கு ஏகப்பட்ட கடிதங்கள் குவிந்து உள்ளதாகவும் இதனை அடுத்து சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்க்கும் போது பல இடங்களில் கட் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த படத்தின் உயிர்நாடியான முக்கிய காட்சிகளையும் வசனங்களையும் சென்சார் அதிகாரிகள் கட் செய்து விட்டால் இந்த படத்தை ரிலீஸ் செய்து பிரயோஜனம் இல்லை என்பதால் படக்குழுவினர் தற்போது அச்சத்தில் இருப்பதாகவும், இந்த படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்திருப்பதால் இந்த படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது

From around the web