வெளியானது மாநாடு படத்தின் டீஸர்...!

சிம்பு என்று அழைக்கப்படும் நடிகர் சிலம்பரசன் இவர் இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் டி. ராஜேந்திரன் அவரின் மகன் ஆவார் . சிறு வயது முதல் தனது மாறுபட்ட நடிப்பாலும் மக்களிடையே "லிட்டில் சூப்பர்ஸ்டார் "என்று அழைக்கப்பட்டவர் நடிகர் சிம்பு.கடந்த பொங்கலன்று மாஸ்டர் திரைப்படத்துடன் நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது .

. சிம்புவின் மாறுபட்ட வேடத்தில் உருவாகியுள்ள படம் மாநாடு. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இப்படத்தினை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். சிம்பு மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு புகழ்பெற்ற இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் மாநாடு படத்தின் டீசரை வெளியிட்டது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.இன்று பிறந்த நாள் கொண்டாடும் சிம்புவின் பிறந்த நாளன்று அவரது மாநாடு திரைப்படத்தின் டீசர் வெளியாகி அவரையும் அவருடைய ரசிகர்களையும் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. அதுவும் குறிப்பாக ஆஸ்கார் நாயகன் இப்படத்தின் டீசரை வெளியிட்டது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது .
Here is the teaser of Maanaadu. https://t.co/dFeyq21W6K#Maanaaduteaser #HBDSilambarasan #Rewind #Maanaadu #aVPpolitics @silambarasanTR_ @vp_offl @sureshkamatchi @thisisysr
— A.R.Rahman (@arrahman) February 3, 2021