பொங்கல் தினத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து!

பொங்கல் தினத்தில் ஏற்கனவே விஜய் மற்றும் சிம்பு ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது என்பதும் அவர்கள் நடித்த மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்தது
அது மட்டுமன்று ஜெயம் ரவி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அவர் நடித்த பூமி திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தனுஷ் ரசிகர்களுக்கு ஏற்கனவே இந்த பொங்கல் விருந்தாக ஜகமே தந்திரம் திரைப்படத்தின் டிரைலர், மாஸ்டர் ரிலீசாகும் அனைத்து திரையரங்குகளிலும் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன
தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்க உள்ள படத்தின் டீஸர் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த டீசரின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றதாகவும் தற்போது எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
எனவே வரும் பொங்கல் தினத்தில் ஜகமே தந்திரம் ட்ரெய்லர் மற்றும் தனுஷ் செல்வராகவன் இணையும் படத்தின் டீசர் ஆகியவை வெளிவர இருப்பதால் தனது ரசிகர்களுக்கு இரட்டை பொங்கல் விருந்தாக இருக்கும் என்று கருதப்படுகிறது