ப்ளீஸ் என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா படத்தை மட்டும் பார்க்காதீங்க.. கௌதம் மேனன் அறிவுரை!!

கொரோனாவினைக் கட்டுக்குள் கொண்டுவர இந்தியாவில் கடுமையான ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, ஊரடங்கு குறித்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், காவலர்கள் எனப் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சிலர் கேட்ட பாடில்லை. கோடை வெயில் கொழுத்தினாலும் பரவாயில்லை, கொரோனா தொற்று வந்தாலும் பரவாயில்லை என்பதுபோல் சிலர் முட்டாள்தனமாக வீதிகளில் வலம் வருவதைப் பார்க்க முடிகிறது. போலீசார் கொடுக்கும் நூதன தண்டனைகளும் அவர்களுக்கு கேலிக் கூத்தாகவே உள்ளது. வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் பலரும் தொலைக்காட்சி, வலைதளம் இரண்டுதான் வாழ்க்கை
 
ப்ளீஸ் என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா படத்தை மட்டும் பார்க்காதீங்க.. கௌதம் மேனன் அறிவுரை!!

கொரோனாவினைக் கட்டுக்குள் கொண்டுவர இந்தியாவில் கடுமையான ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, ஊரடங்கு குறித்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், காவலர்கள் எனப் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சிலர் கேட்ட பாடில்லை.

கோடை வெயில் கொழுத்தினாலும் பரவாயில்லை, கொரோனா தொற்று வந்தாலும் பரவாயில்லை என்பதுபோல் சிலர் முட்டாள்தனமாக வீதிகளில் வலம் வருவதைப் பார்க்க முடிகிறது. போலீசார் கொடுக்கும் நூதன தண்டனைகளும் அவர்களுக்கு கேலிக் கூத்தாகவே உள்ளது.

வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் பலரும் தொலைக்காட்சி, வலைதளம் இரண்டுதான் வாழ்க்கை என்று வாழ்ந்துவர கௌதம் மேனன் அனைவருக்கும் ஒரு அறிவுரை கூறியுள்ளார். அவர் கூறிய வித்தியாசமான அறிவுரை அனைவரையும் கவர்ந்துள்ளது.

ப்ளீஸ் என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா படத்தை மட்டும் பார்க்காதீங்க.. கௌதம் மேனன் அறிவுரை!!

அவர் கூறியதாவது, “ஊரடங்கு உத்தரவை நாம் கடுமையாகக் கடைபிடிக்க வேண்டும், அப்போதுதான் கொரோனாவை விரட்ட முடியும். இந்த நேரத்தை குடும்பத்தினருடன் செலவிடுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், அழகை மெருகேற்றுங்கள், புத்தகம் படியுங்கள், டிவி மற்றும் ஆன்லைனில் திரைப்படம் பாருங்கள்.

கடுமையானதாக இருந்தாலும் தயவு கூர்ந்து கடைபிடியுங்கள், ஆனால் அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்தையும் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தையும் மட்டும் பார்க்காதீர்கள்.

அவ்விரு படங்களையும் பார்த்துவிட்டு வெளியே சுற்றுலா செல்லவோ அல்லது வெளியில் சுற்றுவதற்கான நேரம் இது என்று  நினைத்துவிடாதீர்கள்” என்று கூறியுள்ளார்.

இளைஞர்களின் மனம் கவர்ந்த இயக்குனரான கௌதம் மேனனின் இந்த அறிவுரைக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

From around the web