ஷிவானியை பற்றி பேசாதே: ஆரியை அடிக்க சென்றாரா பாலாஜி?

 

ஷிவானியை பற்றி பேசியதால் ஆரியை அடிக்க சென்று செல்லும் வகையில் நடந்து கொண்ட பாலாஜியின் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பாலாஜி மற்றும் ஆரி ஆவேசமாக மோதி வருகின்றனர் என்பதும் இருவரும் ஜெயிலுக்கு சென்றும் அங்கேயும் மோதிக் கொண்டனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன் வெளியான வீடியோவில் காதல் கண் கட்டுதே என்று என்னை ஏன் சொன்னீர்கள்? உங்களுக்கு தெரியுமா எனக்கு காதல் என்று? என ஆவேசமாக பாலாஜி கேட்க அதற்கு ஆரி, ‘அப்படி என்றால் ஷிவானி தாயாரிடம் அன்றைக்கு பேசி இருக்க வேண்டியதுதானே’ என்று பதிலடி கொடுக்கிறார் 

angry bala1

பாலா, ஆரி இருவரும் ஆவேசமாக பேசியதை பார்த்து ரம்யா இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்தபோது ரம்யாவை கலாய்க்கிறார் ஆரி. அப்போது ரம்யாவும் பதிலுக்கு ஆரியை கலாய்க்கிறார் இந்த நிலையில் ஷிவானி பேச்சை நான் எடுக்கவில்லை என்றும், பாலாதான் எடுத்தான் என்று ஆரி கூறியபோது, பாலாஜியை மிகுந்த ஆத்திரத்துடன் ஷிவானியை பற்றி பேசாதே, ஷிவானி பேச்சை எடுக்காதே என தலையணையை எடுத்து ஆரியை அடிக்க செல்வதுபோல் சென்றார். அதன்பின் தலையணையை தரையில் வீசிவிட்டு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஒரு போட்டியாளர் விக்னஸை புரிந்துகொண்டு அந்த விக்னஸை தூண்டிவிட்டு அவரை ஆவேசமடைய செய்து பார்வையாளர்கள் மத்தியில் கெட்ட பெயர் வாங்க வைத்து ஒவ்வொருவராக வெளியேற்றி கொண்டிருக்கிறார் ஆரி. அவருடைய அடுத்த குறி பாலாஜி என்பது இந்த வீடியோ மூலம் தெரிய வருகிறது


 

From around the web