ஆரி பற்றி பேசாதே: மகள் ரம்யாவை மறைமுகமாக அலர்ட் செய்த அம்மா!

 

பிக்பாஸ் வீட்டில் ஆரியை எதிர்த்து சண்டை போட்டவர்கள் வரிசையாக வெளியேற்றப்பட்டு கொண்டிருப்பதை அறிந்த ரம்யாவின் அம்மா மறைமுகமாக ரம்யாவிடம் இதுகுறித்து கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிக்பாஸ் வீட்டில் நேற்று வந்த ரம்யாவின் அம்மா மற்றும் அவரது சகோதரர் ரம்யாவுக்கு மறைமுகமாக ஒரு சில விஷயங்களை கூறி சென்றனர். ரம்யா கடந்த சில நாட்களாக ஆரி குறித்து சிலரிடம் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நிலையில் யாரை பற்றியும் பின்னாடி பேச வேண்டாம் என்றும் எது பேச வேண்டும் என்றாலும் சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாகவே பேசு என்றும் ரம்யாவுக்கு அவரது அம்மா அட்வைஸ் செய்தார் 

ramya brother

இதேபோல் ரம்யாவின் சகோதரர் கூறும்போது நீ இந்த வாரம் ஒருவேளை வெளியே வந்தால் அதற்கு நீ காரணமில்லை என்று கூறியதிலிருந்து மறைமுகமாக ஆரி ரசிகர்கள்தான் உன்னை வெளியேற்ற காத்திருக்கின்றனர் என்பதை கூறியுள்ளார் 

குறிப்பாக ஆரி குறித்து வேறு யாரிடமும் பேச வேண்டாம் என்றும் ரம்யா சகோதரர் மற்றும் அம்மா ஆகிய இருவரும் ரம்யாவுக்கு மறைமுகமாக குறிப்பிட்டு சொல்லி உள்ளனர். இதனை ரம்யா புரிந்து கொண்டு இனி வரும் நாட்களில் ஆரியுடன் சமாதானம் செய்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

ஆனால் அதே நேரத்தில் இந்த வாரம் ரம்யா எவிக்சன் பட்டியலில் இருப்பதால் அவரை வெளியேற்ற வேண்டும் என்று ஆரி ரசிகர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web