விளையாட்டிற்காக மனிதத் தன்மையினை இழந்துவிடக் கூடாது- ஷெரின்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தினை நோக்கி விறுவிறுப்பாக பயணிக்கிறது. வேலைக்காரன் படத்திலிருந்து, “எழு வேலைக்காரா” என்ற பாடலோடு பொழுது புலர்ந்தது. போட்டியாளர்கள் பைனலில் வெற்றி பெற்றால் என்ன பேசுவார்கள் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது, போட்டியாளர்கள் ஒவ்வொருவராய் பேசுமாறு அழைப்பட்டனர். முதலாவதாக பேசிய முகின், “ வெற்றி பெற்றதற்கு ஜாலி ஜாலி என்று சொன்னார், மக்களுக்கு நன்றி, எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தது” என்றார். அடுத்து பேசிய கவின்” ஒரு வேளை நான் வெற்றிபெற்றால், அந்த
 
விளையாட்டிற்காக மனிதத் தன்மையினை இழந்துவிடக் கூடாது- ஷெரின்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தினை நோக்கி விறுவிறுப்பாக பயணிக்கிறது. வேலைக்காரன் படத்திலிருந்து, “எழு வேலைக்காரா” என்ற பாடலோடு பொழுது புலர்ந்தது.

 போட்டியாளர்கள் பைனலில் வெற்றி பெற்றால் என்ன பேசுவார்கள் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது, போட்டியாளர்கள் ஒவ்வொருவராய் பேசுமாறு அழைப்பட்டனர். முதலாவதாக பேசிய முகின், “ வெற்றி பெற்றதற்கு ஜாலி ஜாலி என்று சொன்னார், மக்களுக்கு நன்றி, எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தது” என்றார்.

விளையாட்டிற்காக மனிதத் தன்மையினை இழந்துவிடக் கூடாது- ஷெரின்!!

அடுத்து பேசிய கவின்” ஒரு வேளை நான் வெற்றிபெற்றால், அந்த தருணத்தில் மட்டுமே என்னால் பேச முடியும். அந்த தருணம் எப்படி இருக்கும் என்று இப்போதே தயார் செய்தால் அது உண்மையாக இருக்காது, பொய்யாகவே இருக்கும்” என்று கூறினார்.

அடுத்து பேசிய ஷெரின், “விளையாட்டில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக மனிதத் தன்மையினை எப்போதும் இழந்துவிடக் கூடாது என்று நினைக்கிறேன் என்று நான் நுழையும்போதே கமல் ஹாசன் சாரிடம் சொல்லிவிட்டு வந்தேன். எனக்குள் இருக்கும் உள்ள ஒரு விஷயத்திற்காக நீங்கள் எனக்கு ஆதரவு அளித்தீர்கள், அதற்கு நன்றி” என்றார்.

From around the web