இங்கேயும் ஆங்கரிங் செய்ய வேண்டாம்: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்!

 

பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக நுழைந்த அர்ச்சனா இரண்டு நாட்கள் மட்டும் கலகலவென மற்ற போட்டியாளர்களை இடம் பேசி வந்தார். ஆனால் திடீரென அவர் அந்த வீட்டிற்கு பிக்பாஸ் போல் செயல்பட ஆரம்பித்தார் 

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும்போது நாட்டாமைத்தனம் செய்வது போலவே பிக்பாஸ் வீட்டிலும் அவர் தன்னைத்தானே நாட்டாமையாக நினைத்துக் கொண்டு அனைத்து விஷயத்திலும் மூக்கை நுழைத்தார்.

குறிப்பாக சனம்ஷெட்டி மற்றும் சுரேஷ் இடையே நடந்த பிரச்சனையில் சுரேசை வலுக்கட்டாயமாக மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்க வைத்தார். அதேபோல் பாலாஜியை குழந்தை என்றும் சீண்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியபோது, பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே செய்யும் ஆங்கரிங் விஷயங்களை இங்கேயும் செய்ய வேண்டாம் என்று கூறினார். அர்ச்சனா நாட்டாமையாக இருப்பதை மறைமுகமாக கமல் சுட்டிக்காட்டியது அர்ச்சனாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கமல்ஹாசனின் அறிவுரையை அடுத்து அர்ச்சனா இனிமேல் அடக்கி வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web