சும்மா அதிருதில்ல... தெரிக்கவிட்ட டான் சூட்டிங் செட்!!!

சிவகார்த்திகேயனின் டான் படம் குறித்து முக்கியமான தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் 'டான்' என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இத்திரைப்படத்தை அட்லியின் உதவியாளரான சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். மேலும் இதில் நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது டான் படம் குறித்து முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது. வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம். கோயம்புத்தூரில் உல்ல கே.பி.ஆர் இன்ஜினியரிங் கல்லூரியில் ஷூட்டிங் நடக்கவுள்ளது.
இதற்காக டான் என்ற பெயன்டிங்குடன், வேற லெவலில் ஒரு அரங்கும் ரெடியாக்கப்பட்டு வருகிறது.