ஆளுநருக்கு இவ்வளவு அவகாசம் தேவையா: 7.5% விவகாரம் குறித்து நீதிபதிகள் கேள்வி!

 

7.5 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்க ஆளுநருக்கு இவ்வளவு அவகாசம் தேவையா? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அரசாணை பிறப்பித்தது. இதுகுறித்த மசோதா ஆளுநரின் கையெழுத்துக்காக அனுப்பப்பட்ட நிலையில் ஆளுநர் இன்னும் இதில் கையெழுத்திடாமல் உள்ளார் 
இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று மதுரை ஐகோர்ட் கிளையில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் நீதிமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றாலும் மனசாட்சிபடி அவர் முடிவு எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

சட்டசபை முடிவெடுத்த விவகாரத்தில் முடிவெடுக்க ஆளுநருக்கு இவ்வளவு அவகாசம் தேவையா என்றும் மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் நீட் தேர்வில் வென்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா மீது ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web