வெளியானது டோபாரா டீஸர்...!

ஆடுகள நாயகியின் நடிப்பில் உருவாகியிருக்கும் "டோபாரா" படத்தின் டீஸர்..,
 
நடிகை டாப்சியின் ட்விட்டர் பக்கம் கூறும் கருத்து...,

இயக்குனர் "வெற்றிமாறன்" இயக்கத்தில் "நடிகர் தனுஷ்" நடித்து இருந்து வெளியாகிய திரைப்படம் "ஆடுகளம்". திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக "நடிகை டாப்ஸி "நடித்திருந்தார். இப்படத்தில் நடிகை டாப்ஸி நடிப்பு மக்களிடம் நல்லதொரு வரவேற்பை பெற்றது.நடிகை டாப்ஸி தமிழில் "வந்தான்வென்றான்", "காஞ்சனா-2" போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தல அஜித் நடித்த "ஆரம்பம்" என்ற திரைப்படத்தில் நடிகை டாப்சி  நடித்திருந்தார்‌.

taapsee

மேலும் நடிகை டாப்சி  இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரம் ஆகிய "நடிகர் அமிதாப் பச்சனுடன்" "பிங்க்" என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இத்திரைப்படம் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்று பல்வேறு விருதுகளை பெற்றது. இதனால் இத்திரைப்படத்தின்  தமிழாக்கம் "நேர்கொண்ட பார்வை" என்ற தலைப்பில் வெளியானது. இத்திரைப்படத்தில் "அல்டிமேட் ஸ்டார்"," தல" என்று அழைக்கப்படும் "நடிகர் அஜித்குமார்" நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை டாப்சி பானு தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துகளைக் கூறியுள்ளார். இந்நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் தான் நடிக்கயிருக்கும் "டோபாரா" படத்தினைப் பற்றி கருத்து கூறியுள்ளார்.

"நேரம். இடம். பிரபஞ்சம். 2021 நீங்கள் எல்லாவற்றையும் கேள்வி கேட்க வைக்கும். படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது! "என்று நடிகை டாப்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

From around the web