மாமியார் பிறந்த நாளில் மருமகள் குஷ்பு போட்ட டுவீட் என்ன தெரியுமா?

 

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்புவின் மாமியாரும் இயக்குனர் சுந்தர் சியின் தாயாருமான தெய்வானை சிதம்பரம் என்பவருக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை குஷ்புவின் குடும்பத்தினர் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்

இந்த நிலையில் தனது மாமியாரின் பிறந்தநாள் கொடுத்து மருமகள் குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எங்கள் பேரரசிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். எங்கள் இதயத்தையும் வீட்டையும் ஆள்பவர். ஒரு குடும்பமாக நாம் ஒற்றுமையாக இருக்கிறோம், ஏனென்றால் அவர் ஒரு கூட்டுக் குடும்பத்தின் மதிப்புகளை நம்மில் தெரிவித்துள்ளார். என் மாமியார். தெய்வானை சிதம்பரம் எங்களுக்கு வழிகாட்ட நீங்கள் கிடைத்ததற்கு நாங்கள் மிகவும் பாக்கியம். லவ் யூ அம்மா’ என்று தெரிவித்துள்ளார்.

khushboo family1

மேலும் குஷ்பூ, சுந்தர் சி மற்றும் குஷ்புவின் மகள்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் குஷ்பு தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வயதிலும் மாமியாரை மதிக்கும் மருமகளாக குஷ்பு இருக்கிறார் என்றும் தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றி வருகிறார் என்றும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்


 

From around the web