இந்த ஒரு விஷயத்தில் உங்கள் கணவரை கூட அனுமதிக்காதீர்கள்: தமிழ் நடிகர் மனைவி

இந்த ஒரு விஷயத்தில் உங்கள் கணவரை கூட நீங்கள் அனுமதிக்காதீர்கள் என தமிழ் நடிகர் நகுலின் மனைவி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்
பொதுவாக பெண்களுக்கு குழந்தை பிறந்து விட்டால் குண்டாகி விடுவார்கள் என்றும் அதன்பின் அவரது கணவர் உள்பட உறவினர்கள் அனைவரும் கேலியும் கிண்டலும் செய்வார்கள் என்றும் கூறிய நகுலின் மனைவி இவ்வாறு உடல் பருமனை கேலி செய்ய உங்கள் கணவரை கூட அனுமதிக்காதீர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் அவர் கூறியிருப்பதாவது: தாயாக இருப்பது எளிதல்ல, ஏன் அந்தத் தழும்புகளை மறைய வைக்க வேண்டும்? போரில் கிடைத்த தழும்புகளை மக்கள் கொண்டாடுவதில்லையா? பின் ஏன் பிரசவத் தழும்புகளைக் கொண்டாடக் கூடாது? எடை குறைந்த பிறகும் ஏன் அந்தத் தழும்புகளை நாம் சுமக்கக் கூடாது? நீங்கள் யார், உங்கள் திறன் என்ன என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தும்.
திருமணம், குழந்தைகள் போன்ற விஷயங்கள் நீங்கள் மனதளவில் தயாராக இருந்தால் மட்டுமே நடக்க வேண்டும். நீங்கள் சரியான நபருடன் இருந்தால் அவர் உங்களை ஆதரிப்பார், உங்களுடன் நிற்பார். சரியான நபரை நீங்கள் திருமணம் செய்திருந்தாலே பாதிப் பிரச்சினைகள் இருக்காது. எனவே எச்சரிக்கைகளைப் புறக்கணிக்காதீர்கள், உங்கள் உள்ளுணர்வு சொல்வதைக் கேளுங்கள்.
சுற்றிலும் தரப்படும் அழுத்தம், வயது காரணமாகத் தவறான நபரை மணந்து வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டோ அல்லது விவாகரத்து பெறப் போராடியோ இருக்க விருப்பமா அல்லது தாமதமானாலும் சரியான நபரைக் கண்டுபிடித்து அவருடன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக வாழ விருப்பமா? யோசியுங்கள்".
இவ்வாறு நகுல் மனைவி கூறியுள்ளார்.