100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க கூடாது: மத்திய அரசின் அறிவுறுத்தலால் பரபரப்பு

 

சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ஒன்றில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவித்திருந்தது. இதனை அடுத்து பொங்கல் தினத்தில் வெளியாகும் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் திரைப் படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் முதல் மூன்று நாள் இந்த இரு படங்களின் வசூலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் திடீரென மத்திய அரசு, தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. 100 சதவீத பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது கொரோனா வைரஸ் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் இந்த முடிவை திரும்பப் பெற்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசின் தலைமைச் செயல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

assembly

இதனை அடுத்து தமிழக அரசின் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி என்ற முடிவில் இருந்து பின்வாங்கி புதிய அரசாணை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அரவிந்த்சாமி கஸ்தூரி உள்பட பல திரையுலக பிரபலங்கள் 100% இருக்கை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில் மத்திய அரசு தற்போது அதே கருத்தை தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் மத்திய அரசின் இந்த அறிவிப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளனர்  

theater

From around the web