திமுக இளைஞரணி செயலாளர் நேரில் சென்று விவேக்கின் உடலுக்கு அஞ்சலி!

நடிகர் விவேக்கின் உடலுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி!
 
திமுக இளைஞரணி செயலாளர் நேரில் சென்று விவேக்கின் உடலுக்கு அஞ்சலி!

தனது காமெடி திறனாலும் தனது நடிப்பாலும் மக்கள் மத்தியில் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படுகிறார் நடிகர் விவேக். நடிகர் விவேக் பெரியவர் சிறியவர் என்று பாராமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் பண்பு கொண்டவர். மேலும் அவரது காமெடியை விட காமெடியில் காணப்படும் கருத்துக்களை மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும். அப்படி அவர் காமெடியை விட கருத்துக்களுக்கு குறிப்பாக சமூக கருத்துக்களை முக்கியமாக கருதி தனது திரையுலகில் பணியாற்றியிருந்தார்.

vivek

மேலும் இவர் அப்துல் கலாம் ஐயாவின் ஆசையான மரங்கள் நட வலியுறுத்தியும் அவரும் மரங்கள் நடும் வந்தார். மேலும் இவர் கோடிக்கணக்கான மரங்களை நட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இவர் இன்று அதிகாலை மரித்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதன்படி அவர் நேற்றையதினம் மாரடைப்பால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அவரின் உயிரிழப்பு திரைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பாக காணப்படுகிறது. மேலும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த காலை முதலே பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.  மேலும் தமிழகத்தில் உள்ள திமுக அதிமுக  போன்ற கட்சிகள் சார்பிலும் பலரும் வந்து நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.  திமுகவின் இளைஞரணி  செயலாளரான உதயநிதி ஸ்டாலின் மறைந்த நடிகர் விவேக்கின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இது போன்று பல தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.. தற்போது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது மக்கள் நடுவில் கொண்டு செல்லப்படுகிறார்

From around the web