தீபாவளியை ரசிக்க வைக்கும் திரைப்பாடல்கள் ஒரு பார்வை

தீபாவளி பண்டிகை மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது பலருக்கு உற்சாகத்தை தரக்கூடிய விசயமாகும். தமிழ் சினிமாவில் பல்வேறு காட்சிகளுக்கேற்ப பாடல்கள் உண்டு. அதில் அனைவராலும் மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் தீபாவளிக்கு பாடல்கள் உண்டா என்றால் குறிப்பிட்ட சில பாடல்களே உள்ளன. அவை மிகப்பெரிய வரவேற்பு பெற்ற பாடல்களாக விளங்குகிறது. மற்ற விசயங்களோடு சேர்த்து பாடல்களும் பண்டிகையின் வீரியத்தையும் விசேஷத்தையும் அதிகப்படுத்துகின்றன என்று சொன்னால் மிகையாகாது. கல்யாணப்பரிசு படத்தில் இடம்பெற்ற உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு
 

தீபாவளி பண்டிகை மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது பலருக்கு உற்சாகத்தை தரக்கூடிய விசயமாகும்.

தீபாவளியை ரசிக்க வைக்கும் திரைப்பாடல்கள் ஒரு பார்வை

தமிழ் சினிமாவில் பல்வேறு காட்சிகளுக்கேற்ப பாடல்கள் உண்டு. அதில் அனைவராலும் மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் தீபாவளிக்கு பாடல்கள் உண்டா என்றால் குறிப்பிட்ட சில பாடல்களே உள்ளன. அவை மிகப்பெரிய வரவேற்பு பெற்ற பாடல்களாக விளங்குகிறது.

மற்ற விசயங்களோடு சேர்த்து பாடல்களும் பண்டிகையின் வீரியத்தையும் விசேஷத்தையும் அதிகப்படுத்துகின்றன என்று சொன்னால் மிகையாகாது.

கல்யாணப்பரிசு படத்தில் இடம்பெற்ற உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி என்ற பாடலே முதன்மை ஹிட் பாடலாய் தமிழ் சினிமாவில் முதன் முதலாய் வந்திருக்கிறது. இந்த பாடல் அந்தக்காலத்தில் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த இனிமையான ஹிட் பாடல். இன்று வரை தீபாவளி விளம்பரங்கள், முன்னோட்டங்கள் பலவற்றுக்கு இந்த பாடலின் சில வரிகளை வணிக நிறுவனங்களும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும் பயன்படுத்துவர்.

இதற்கு அடுத்த பாடலாக பூவே பூச்சூடவா படத்தில் இடம்பெற்ற சின்னக்குயில் சித்ரா பாடிய பட்டாச சுட்டு சுட்டு போடட்டுமா என்ற பாடலே புகழ்பெற்றது. மிக அழகாக இனிமையாக சித்ரா அந்த பாடலை பாட இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். அடுத்த வீட்டு மாடிக்கு ஆரியபட்டா அனுப்பட்டா அடிக்க வந்தா உன்னிடம் சொல்லட்டா என்ற புதுமை வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதி இருந்தார். இப்பாடல் அப்போது நதியா மீது பெண்களுக்கு இருந்த வரவேற்பில் மிகப்பெரிய ஹிட் ஆனது அந்த வருட தீபாவளிக்கு நதியா, தோடு, வளையல், சேலை, சுடிதார் என்று பிரபலமானது.

இந்த இரண்டு பாடல்களும் தீபாவளி கொண்டாடும்போது வருவதாக காட்சியமைப்பு இருந்தது.

நாயகன் படத்தின் இடம்பெற்ற நான் சிரித்தால் தீபாவளி என்ற பாடலும் தீபாவளி விளம்பரங்கள், முன்னோட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு கொஞ்சம் இந்த பாடலில் இருந்து எடுத்து சேர்க்கும் அளவுக்கு புகழ்பெற்ற பாடலாக இன்று வரை விளங்குகிறது. இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த பாடலில் தீபாவளி கொண்டாடும் காட்சியமைப்பு இல்லாவிட்டாலும் தீபாவளி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், முன்னோட்டங்கள் பலவற்றுக்கு இப்பாடல் இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது. பழம்பெரும் பாடகிகள், ஜமுனாராணி, எம்.எஸ் ராஜேஸ்வரி இருவரும் இணைந்து பாடியதும் குழந்தைக்குரலில் அழகாக இனிமையாக பாடியது அப்போது பெரும் ஹிட் ஆடியது.

தீபாவளி டாப் 3 பாடல்களில் இந்த மூன்று பாடல்கள் மட்டுமே முக்கிய இடத்தை வகித்து வருகிறது.

நான் புடிச்ச மாப்பிள்ளை என்ற படத்தில் இடம்பெற்ற தீபாவளி தீபாவளிடோய், சிவகாசியில் இடம்பெற்ற தீபாவளி தீபாவளி பாடல், ரமணாவில் இடம்பெற்ற வானம் அதிரவே பாடம் படிக்கலாம் ரோசி பாடல் உள்ளிட்ட பாடல்களும் தீபாவளி இனிமையை அதிகரிக்கவே செய்த பாடல்களாகும் என்னதான் இருந்தாலும் தீபாவளி என்றால் மேலே சொன்ன முதல் மூன்று பாடல்களும் தீபாவளி இனிமையை அதிகரிக்க செய்யும், தீபாவளி நாளை நினைத்து ஏங்க செய்யும் பாடல்களாக அன்று முதல் இன்று வரை இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

From around the web