சினிமா தணிக்கை தீர்ப்பாயம் கலைப்பு: இனி சென்சார் வாங்க என்ன செய்ய வேண்டும்?

 

சினிமா தணிக்கை தீர்ப்பாயம் உள்ளிட்ட 4 தீர்ப்பாயங்களை மத்திய அரசு கலைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விமான நிலைய மேல்முறையீட்டு தீர்ப்பாயம், வர்த்தக சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம், வருமான வரி சட்டம் தொடர்பான முன்கூட்டியே அதிகாரமளிக்கும் தீர்ப்பாயம் மற்றும் திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஆகிய நான்கு தீர்ப்பாயங்களும் இனி செயல்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது 

இதனை அடுத்து இனி சென்சார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டால் இனிமேல் மேல்முறையீடு செய்ய முடியாது என்பதும் இனி உயர் நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மத்திய அரசின் இந்த முடிவுக்கும் பாலிவுட் திரையுலகினர் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர் ஆனால் தமிழ் திரையுலகில் இருந்து இதுவரை எந்தவிதமான கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும் இனிமேல் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

ஏற்கனவே தமிழ் திரைப்படமான ஆன்ட்டி இந்தியன் என்ற திரைப்படத்திற்கு சென்சார் வழங்க முடியாது என சென்சார் அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து அவர் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில்தான் சினிமா தணிக்கை தீர்ப்பாயம் கலைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web