தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல தமிழ் நாட்டிற்கு பேரிழப்பு!ஆடுகளம் நரேன்!

விவேக் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அதன்பின்னர் பேட்டி அளித்தார் ஆடுகளம் நரேன்!
 
தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல தமிழ் நாட்டிற்கு பேரிழப்பு!ஆடுகளம் நரேன்!

மக்களுக்கு நல்ல ஒரு காமெடியை கொடுத்தால் போதும் மக்கள் மனதில் இடம் எடுத்து விடலாம் என்ற எண்ணம் தற்போதுள்ள காமெடி நடிகர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் ஆரம்ப காலத்தின் முதலே தற்போது வரை தான் பணியாற்றிய ஒவ்வொரு திரைப்படங்களிலும் காமெடியோடு கருத்தினையும் கூறி மக்கள் மனதில் சமூக அக்கறையின் உருவாக்கியவர் நடிகர் விவேக். நடிகர் விவேக் திரைப்படத்திற்கு மட்டுமின்றி சமூகத்திற்கும் பல்வேறு குரல்களை கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் லட்சக்கணக்கான மரங்களை நட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

vivek

அவர் இன்று அதிகாலை மரணமடைந்த தகவல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் தள்ளியது. மேலும் அவரின் உடலுக்கு தமிழ் திரையுலகினர் அனைவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் இயக்குனர்கள் பலரும் நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர், இந்நிலையில் தற்போது அவரின் இறுதி ஊர்வலம் பயணமானது தொடங்கியது. இந்த இறுதி ஊர்வலத்தில் ரசிகர்கள் நடிகர்கள் என அவரை சுற்றி பலரும் உள்ளனர். இந் நிலையில் அவருடன் பணியாற்ற பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல் தற்போது ஆடுகளம் படத்தின் புகழ் பெற்ற நரேன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் அவர் கூறினார். மேலும் அவரது மரணம் பேரதிர்ச்சியை கொடுப்பதாக அவர் கூறினார். மேலும் அவர் ஒரு நல்ல மனிதர் மாமனிதர் சமூக சீர்திருத்தவாதி என்றும் அவர் புகழாரம் சூட்டினார். மேலும் மரணமோ எந்த பிரச்சினையோ அவரிடம் கூறினால் உடனடியாக சரி என்றும் கூறுவார் என்றும் அவர் கூறினார். மேலும் அவரின் இழப்பு தமிழ் திரைக்கு மட்டுமின்றி தமிழகத்தின் ஒட்டுமொத்த பேரிழப்பு என்றும் அவர் கூறினார். மேலும் அவர் நடிகர் விவேக்குடன் பணியாற்றவில்லை ஆயினும் பேசி உள்ளதாகவும் அவர் கூறினார்.

From around the web