சூர்யாவின் அடுத்த படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்!

 

சூர்யா தற்போது சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படத்தை அடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் தெரிந்தது 

வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வாடிவாசல் படத்தை அடுத்து அவர் நடிக்கப்போகும் படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது 

ஏற்கனவே இயக்குனர் பாண்டியராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி ஜெயம் ரவி நடித்த அடங்கமறு திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது

எனவே சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் பாண்டிராஜ் அல்லது கார்த்திக் தங்கவேல் என்றும் இதில் ஒருவரை சூர்யா விரைவில் தேர்வு செய்வார் என்றும் கூறப்படுகிறது

From around the web