சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் டி.கே போஸ்!

கொடைக்கானல் என்ற திரைப்படம் சில வருடங்களுக்கு முன் வந்திருக்கும் இதை இயக்கியவர் டி.கே போஸ் அவர்கள். அத்தோடு அவர் இயற்கை எய்தினார். டி.கே போஸ் யார் அவர் இயக்கிய படங்கள் என்னென்ன ஒரு சின்ன பார்வை. 90களில் டி.கே. போஸின் படங்கள் அதிகம் வெளிவந்தன. ராமராஜன் நடித்த படங்கள் கொஞ்சம் அதிகமாக வந்தன. இவர் இயக்கிய ராசாவே உன்னை நம்பி திரைப்படம் மிக மிக உணர்வுப்பூர்வமான படமாக வந்தது. ராதாரவி, ராமராஜன் மற்றும் சரிதா என அண்ணன்,
 

கொடைக்கானல் என்ற திரைப்படம் சில வருடங்களுக்கு முன் வந்திருக்கும் இதை இயக்கியவர் டி.கே போஸ் அவர்கள். அத்தோடு அவர் இயற்கை எய்தினார்.

சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் டி.கே போஸ்!

டி.கே போஸ் யார் அவர் இயக்கிய படங்கள் என்னென்ன ஒரு சின்ன பார்வை.

90களில் டி.கே. போஸின் படங்கள் அதிகம் வெளிவந்தன. ராமராஜன் நடித்த படங்கள் கொஞ்சம் அதிகமாக வந்தன. இவர் இயக்கிய ராசாவே உன்னை நம்பி திரைப்படம் மிக மிக உணர்வுப்பூர்வமான படமாக வந்தது.

ராதாரவி, ராமராஜன் மற்றும் சரிதா என அண்ணன், தம்பி மற்றும் அண்ணி என உறவுகளுக்குள் அன்பாக இருந்து, அது விரிசலாக மாறுவதை உணர்வுப்பூர்மாக சொன்ன கதை இது. இளையராஜாவின் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆக இருந்தது.

இது போல் பொங்கி வரும் காவேரி என்ற திரைப்படம் அதிரடி ஆக்சன் படமாக வந்தாலும், பாடல்களில் இசைஞானி குறை வைக்கவில்லை. தினமும் சிரிச்சு மயக்கி, வெள்ளி கொலுசுமணி போன்ற புகழ்பெற்ற பாடல்கள் இப்படத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது போல் இவர் இயக்கிய கவிதை பாடும் அலைகள் பெரிய வெற்றி இல்லை என்றாலும் இதில் வந்த பாடல்கள் அனைத்தும் தேன் சொட்டும் பாடல்களாகும்.

இப்படியாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் டி.கே. போஸ் 66 வயதில் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை விருகம்பாக்கத்தில் மரணமடைந்தார்.

From around the web