விஜய்சேதுபதியின் ‘லாபம்’ பட இயக்குனர் எஸ்பி ஜனநாதன் காலமானார்!

 
விஜய்சேதுபதியின் ‘லாபம்’ பட இயக்குனர் எஸ்பி ஜனநாதன் காலமானார்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்து வந்த ‘லாபம்’ என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்த எஸ்பி ஜனநாதன் என்பவர் திடீரென மரணம் அடைந்தது படக்குழுவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

இயற்கை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் எஸ்பி ஜனநாதன் அதன் பின் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது அவர் ‘லாபம்’ திரைப்படத்தை இயக்கி முடித்து விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென அவர் தனது அலுவலகத்தில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

இந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து திரையுலகினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்

From around the web