பெண்ணுக்காக ரூ. 2 லட்சம் கொடுத்து உதவிய இயக்குனர் சசிகுமார்
வாள்சண்டை போட்டியில் கலந்துகொள்ள வசதியின்றி தவித்து வந்த பெண்ணுக்காக ரூ. 2 லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.
Mon, 15 Mar 2021

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர், இயக்குனர் சசிகுமார்.
இவர் தற்போது ராஜவம்சம், எம்.ஜி.ஆர் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் 6வருடங்களுக்கு முன்னால் இத்தாலி வாள்சண்டை போட்டியில் கலந்துகொள்ள வசதியின்றி தவித்து வந்த பெண்ணுக்காக ரூ. 2 லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.
இந்த உதவியை மனதில் வைத்துக்கொண்டு தன் தாயுடன் வந்து சசிகுமாரிடம் நன்றி தெரிவித்துள்ள பவானி, இன்று ஒலிம்பிக்கில் வாள் சண்டைக்காக தேர்வாகியுள்ளார்.
நடிகர் சசிகுமாரின் இந்த உதவி குணத்தை பற்றி கோலிவுட் வட்டாரத்தில் புகழ்ந்து வருகின்றனர்.