கமல்ஹாசன் படத்தை வம்புக்கு இழுத்த இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார்

 

இரண்டாம் குத்து’ என்ற மாபெரும் காவியத்தை இயக்கி முடித்துள்ள சந்தோஷ் ஜெயக்குமாருக்கு திரையுலகினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் ஜெயக்குமார், கமல்ஹாசன் படத்தை வம்புக்கு இழுத்து தன்னுடைய படத்துடன் ஒப்பிட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

சந்தோஷ்குமார் இயக்கிய இரண்டாம் குத்து’ என்ற திரைப்படத்திற்கு கடும் கண்டனங்களை இயக்குனர் பாரதிராஜா தெரிவித்து ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார்.  இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர்களை பார்க்க கண்களை கூசுகிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார் 

இந்த நிலையில் கமலஹாசனின் ’டிக் டிக் டிக்’ என்ற படத்தின் ஸ்டில் ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்த சந்தோஷ், இந்த ஸ்டில்லை பார்க்கும்போது மட்டும் கண்கள் கூடவில்லையா? என இயக்குனர் பாரதிராஜாவை கேள்வி எழுப்பியுள்ளார்

’டிக் டிக் டிக்’ படத்தை கடந்த 1981-ஆம் ஆண்டு பாரதிராஜாதான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ’டிக் டிக் டிக்’ படத்தில் நீச்சல் உடையுடன் நடிகைகள் வந்தாலும் ஆபாசமான அருவருக்கத்தக்க, இரட்டை அர்த்த வசனங்கள் அந்த படத்தில் இருக்காது என்பதும் ஆனால் சந்தோஷ் ஜெயக்குமார் படத்தில் முழுக்க முழுக்க ஆபாசம் மற்றும் நேரடியான பாலின காட்சிகள் தான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது


 

From around the web