இயக்குனர் பொன்ராம் அடுத்த படத்தின் சென்சார் தகவல்

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கி முடித்துள்ள அடுத்த‘எம்.ஜி.ஆர் மகன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரடொக்சனும் முடிந்து தற்போது ரிலீசுக்கும் தயாராகிவிட்டது. இதன்படி ‘எம்.ஜி.ஆர் மகன்’ படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படம் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது உறுதியாகியுள்ளது பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சசிகுமார், மிருணாளினி,
 

இயக்குனர் பொன்ராம் அடுத்த படத்தின் சென்சார் தகவல்

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கி முடித்துள்ள அடுத்த‘எம்.ஜி.ஆர் மகன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரடொக்சனும் முடிந்து தற்போது ரிலீசுக்கும் தயாராகிவிட்டது.

இதன்படி ‘எம்.ஜி.ஆர் மகன்’ படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படம் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது உறுதியாகியுள்ளது

பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சசிகுமார், மிருணாளினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பிரபல பாடகர் அந்தோணி தாசன் இசையமைத்துள்ளார். வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web