பாக்யராஜ் சார் மீது வழக்கு பதிந்ததில் பெரிய சூழ்ச்சி உள்ளது- இயக்குனர் பேரரசு

விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி, அஜீத் நடித்த திருப்பதி, அர்ஜூன் நடித்த திருவண்ணாமலை, பார்த்திபன் நடித்த திகார், விஜயகாந்தின் தர்மபுரி உள்ளிட்ட அதிரடி படங்களை இயக்கியவர் இயக்குனர் பேரரசு. சமீப காலமாக எந்த படமும் இயக்காத இவர் சினிமா ப்ளாட்பார்ம் என்ற புதிய நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நான் அவளை சந்தித்த போது’. எல்.ஜி.ரவிசந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேரரசு கலந்து கொண்டார்.
 

விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி, அஜீத் நடித்த திருப்பதி, அர்ஜூன் நடித்த திருவண்ணாமலை, பார்த்திபன் நடித்த திகார், விஜயகாந்தின் தர்மபுரி உள்ளிட்ட அதிரடி படங்களை இயக்கியவர் இயக்குனர் பேரரசு.

பாக்யராஜ் சார் மீது வழக்கு பதிந்ததில் பெரிய சூழ்ச்சி உள்ளது- இயக்குனர் பேரரசு

சமீப காலமாக எந்த படமும் இயக்காத இவர் சினிமா ப்ளாட்பார்ம் என்ற புதிய நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நான் அவளை சந்தித்த போது’. எல்.ஜி.ரவிசந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேரரசு கலந்து கொண்டார்.

அதில் சமீபத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு சம்பந்தமாக பாக்யராஜ் தவறாக பெண்களை இழிவுபடுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. விமர்சிக்கப்பட்டது.

இதை எதிர்த்து பேசிய இயக்குனர் பேரரசு, பாக்யராஜ் சாரின் படங்கள் எல்லாம் பார்க்கும் போது நம் மனம் கெட்டுப்போனது கிடையாது ஆனால் இன்று இளைஞர்கள் கெட்டுப்போவதற்கு சினிமாவே காரணமாக உள்ளது.

பெண்கள் மூன்று வகையால் இருக்கிறார்கள். ஆண்களை நம்பி தன் வாழ்க்கையை சிலர் இழக்கிறார்கள். அவர்களைத் தான் பாக்யராஜ் சார் எச்சரித்து இருந்தார். ’மெளன கீதங்கள்’ என்ற படம் மூலமாகத் தமிழ்நாட்டின் மொத்தப் பெண்களுக்கும் பிடித்த இயக்குநராக மாறியவர் இயக்குனர் பாக்யராஜ் சார். அவர் மீது வழக்குப் பதிவு செய்ததிற்குப் பின்னால் பெரிய சூழ்ச்சி இருக்கிறது என்று தனது ஆதங்கத்தை இயக்குனர் பேரரசு கூறியுள்ளார்.

From around the web