இயக்குனர் ஹரி மருத்துவமனையில் அனுமதி: கொரோனா பாதிப்பா?

 

இயக்குனர் ஹரி தான் இயக்க இருக்கும் புதிய படத்தை நேற்று தொடங்கிய நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர் 

அருண்விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்க திட்டமிட்டு இருந்தார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை கடந்த சில மாதங்களாக செய்து கொண்டிருந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பழனி அருகே நேற்று தொடங்கியது 

hari

இந்த நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தின் படக்குழுவில் உள்ள ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இதனை அடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

இயக்குனர் ஹரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல் தெரியவில்லை. இருப்பினும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும், படப்பிடிப்பு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது


 

From around the web