காதல் ஜோடியை மிரட்டியதாக அமீர் மீது குற்றச்சாட்டு

அமீர் பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் இவர் அறியப்பட்டார் இருப்பினும் இவர் ராமேஸ்வரத்தில் 2008ம் ஆண்டு நடந்த இலங்கை தமிழர் மீதான போருக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் இவரும் சீமானும் கலந்து கொண்டு சர்ச்சையாக பேசியதாக கைதாகினர். அதற்கு பிறகு சமூக ரீதியான பிரச்சினைகளை பேசுபவராக சமீப காலங்களாக புகழ்பெற்று வருகிறார். இந்நிலையில் அமீர் மீது ஒரு காதல் ஜோடி குற்றம் சாட்டியுள்ளது. கன்னியாகுமரி இரனியல் பகுதியை சேர்ந்த அப்சல் ஜெனிஷ் சென்னை சோழிங்கநல்லூரில்
 

அமீர் பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் இவர் அறியப்பட்டார் இருப்பினும் இவர் ராமேஸ்வரத்தில் 2008ம் ஆண்டு நடந்த இலங்கை தமிழர் மீதான போருக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் இவரும் சீமானும் கலந்து கொண்டு சர்ச்சையாக பேசியதாக கைதாகினர்.

காதல் ஜோடியை மிரட்டியதாக அமீர் மீது குற்றச்சாட்டு

அதற்கு பிறகு சமூக ரீதியான பிரச்சினைகளை பேசுபவராக சமீப காலங்களாக புகழ்பெற்று வருகிறார்.

இந்நிலையில் அமீர் மீது ஒரு காதல் ஜோடி குற்றம் சாட்டியுள்ளது.

கன்னியாகுமரி இரனியல் பகுதியை சேர்ந்த அப்சல் ஜெனிஷ் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சத்யாபாமா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிக்கும் போது அதே கல்லூரியில் படித்து வந்த சுரேகா என்ற பெண்ணிற்கும் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாற, காதல் விவகாரம் பெண் வீட்டிற்கு தெரியவர, அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு  தெரிவித்து வந்தனர்.  இந்த நிலையில் காதலர்கள் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி கன்னியாகுமரியில்  பதிவு திருமணம் செய்து பின்னர் தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து, பெண்ணின் தந்தை மகளை காணவில்லை என்று செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.   அதன் பின் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி அதிகாலை ஆறு மணிக்கு அப்சல் வீட்டுக்கு வந்த செம்மஞ்சேரி போலீஸ்  செண்பகவல்லி, அப்சல் ஜெனிஷின் தாயார் அன்புலதா மற்றும் தந்தை ஆல்பட் தாஸையும் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்றுள்ளனர்.  அவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை.

இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன் இயக்குனர் அமீர், காதலர்கள் சுரேகா- அப்சலை  மிரட்டியதாகவும் வாட் அப்பில் வீடியோ வெளியிட்டனர்.  மேலும் போலீஸ் சென்பகவல்லி,  அப்சலின் பெற்றோர்கள் மிரட்டும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.  

சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமீர் இந்த தகவல் உண்மையல்ல என்று தெரிவித்தார்.  

From around the web