தில் பெச்சாரா: ரஜினி ரசிகராக சுஷாந்த்சிங் நடித்த கடைசி படத்தின் விமர்சனம்

கடந்த சில வாரங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கடைசி படம் தில் பெச்சாரா. இந்த படம் நேற்று நள்ளிரவு முதல் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது முகேஷ் சப்ரா இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி, சைஃப் அலி கான் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் The Fault In Our Stars என்ற படத்தின் இந்தி ரீமேக்
 

தில் பெச்சாரா: ரஜினி ரசிகராக சுஷாந்த்சிங் நடித்த கடைசி படத்தின் விமர்சனம்

கடந்த சில வாரங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கடைசி படம் தில் பெச்சாரா. இந்த படம் நேற்று நள்ளிரவு முதல் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது

முகேஷ் சப்ரா இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி, சைஃப் அலி கான் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படம் The Fault In Our Stars என்ற படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சுஷாந்த்சின் ரஜினி ரசிகராக வருகிறார். ரஜினியின் ரெஃப்ரன்ஸ் இந்த படத்தில் அடிக்கடி வருவது ரஜினி ரசிகர்களுக்கான குஷி காட்சிகள்

சுஷாந்த் சிங் மிக அருமையான நடிப்பு. ஒரு ரொமான்ஸ் நாயகனுக்கே உள்ள முகம், இப்படி ஒரு அருமையான நடிகரை இழந்துவிட்டோமே என்று அவரது நடிப்பை பார்க்கும்போது அவர் சிரிக்கும் காட்சியில் கூட அழுகை வருகிறது

ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். மீண்டும் ஒரு ஆஸ்காரை எதிர்பார்க்கலாம்

சயிப் அலிகானின் சிறப்பு தோற்றம் சுமார் தான். ஆனால் 100 நிமிடங்கள் மட்டுமே உள்ள இந்த படத்தில் எமொஷனல், ரொமான்ஸ், உணர்ச்சிமயமான காட்சிகள் ஏராளம். சுஷாந்த் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் பார்க்க வேண்டிய படம்

From around the web