மானத்தை குழிதோண்டி புதைச்சிட்டியே: ஷிவானியை வறுத்தெடுத்த அம்மா!

 

பிக்பாஸ் வீட்டிற்கு நேற்று வந்த ஷிவானியின் அம்மா ஷிவானியை வறுத்தெடுத்த காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கடந்த சீசனில் லாஸ்லியாவின் தந்தை லாஸ்லியாவை கண்டித்ததைவிட இருமடங்கு ஷிவானியை அவரது தாயார் கண்டித்துள்ளார். பாலாஜி உன்மீது காதல் இல்லை, காதல் வந்தால் சொல்கிறேன் என்று சொன்னபோது எனக்கும் காதல் வராது, நானும் இங்கே விளையாடத்தான் வந்திருக்கிறேன் என்று நீ ஏன் சொல்லவில்லை என ஷிவானியை அவர் கண்டித்தார் 

இங்கே நீ எதற்காக வந்தாய்? உன்னுடைய தனித்தன்மை எல்லாம் எங்கே போயிற்று? நீ என்ன சொல்லிவிட்டு வந்தாய்? என்றும் ஷிவானியை வறுத்தெடுத்தார். ரம்யா இடையில் வந்து ஷிவானியின் அம்மாவை சமாதானப்படுத்த முயன்றாலும் அவர் சமாதானம் ஆகவில்லை 

shivani mother

உனக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன். என் உடல் நிலையும் கணக்கில் கொள்ளாமல் உன்னுடைய படப்பிடிப்பிற்கு நான் கூடவே இருந்தேன். அப்படிப்பட்ட அம்மாவுக்கு நீ என்ன பெருமை தேடித் தந்திருக்கிறாய்? என்னுடைய மானத்தை எல்லார் முன்னாலயும் குழிதோண்டி புதைத்து விட்டாய். வெளியில் உள்ளவர்கள் எல்லாம் என்னை அசிங்கமாக திட்டுகிறார்கள் என்று ஷிவானியின் அம்மா தனது ஆதங்கத்தை கொட்டினார்

அதன் பிறகு சிறிது நேரம் கழித்து இனிமேலாவது நல்ல பெண்ணாக இருந்து சந்தோஷமாக விளையாடு, எல்லோரும் மிகவும் புத்திசாலித்தனமாக விளையாடுகிறார்கள். கிறுக்கு மாதிரி சுத்தாதே, போனதெல்லாம் போகட்டும், இனியாவது புத்திசாலித்தனமாக விளையாடு’ என்று அறிவுரை கூறிவிட்டு ஷிவானியின் அம்மா விடைபெற்று சென்றார்

From around the web